Tuesday, January 27, 2009

மருத்துவர்கள் அரசு பணியில் சேர கலந்தாய்வு

செய்தி வெளியீடு எண்.58 நாள்.27.1.2009

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
பத்திரிக்கை செய்தி

தமிழ் நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ அலுவலர் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

மருத்துவர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய 15-10-2008 முதல் 20-10-2008 வரையிலும் 26-11-2008 முதல் 28-11-2008 வரையிலும் 22-12-2008 மற்றும் 23-12-2008 தேதிகளில் கலந்தாய்வு நடைபெற்று 853 மருத்துவர்கள் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர். தற்போதுள்ள மருத்துவ அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெயர்பட்டியல் பெறப்பட்டுள்ளது.

பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஜனவரி 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள குடும்ப நல பயிற்சி மையத்தில் நேர்காணல் / கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வில் பங்கு கொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்த்துத்தெரிந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒம்/..
எம். ஆர்.கே. பன்னீர் செல்வம்
அமைச்சர் (மக்கள் நல்வாழ்வு)
***********
வெளியீடு: இயக்குநர், செய்ய்ய்ய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

1 comment: